ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘மன்மத லீலை’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு காயம்… தீயாய் பரவும் வீடியோ!

கன்னட திரையுலகில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிரிக் பார்ட்டி’. இந்த படத்தை இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார் சம்யுக்தா ஹெக்டே. இது தான் இவர் அறிமுகமான முதல் கன்னட படமாம். இதனைத் தொடர்ந்து ‘காலேஜ் குமார்’ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடித்தார் சம்யுக்தா ஹெக்டே.

அதன் பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘வாட்ச்மேன்’, ‘ஜெயம்’ ரவியின் ‘கோமாளி’, வருணின் ‘பப்பி’, அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’ போன்ற படங்களில் சம்யுக்தா ஹெக்டே நடித்தார். இவர் கன்னடம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘க்ரீம்’ என்ற கன்னட படத்தை இயக்குநர் அபிஷேக் பஷந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.

Share.