கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’-யில் ‘மாஸ்டர்’ கனெக்ஷன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் வில்லன் ரோலில் குட்டி பவானியாக மிரட்டிய மகேந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ண குமார் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

Share.