‘மாஸ்டர்’ பட நடிகை கௌரி கிஷனுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இந்த ஆண்டு (2021) ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவர்களுடன் முக்கிய ரோல்களில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஷாந்தனு, தீனா, நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் குமார், கௌரி கிஷன், மகேந்திரன், ரம்யா, ஸ்ரீமன், ரமேஷ் திலக், சேத்தன் நடித்துள்ளனர்.

இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அவரே தெரிவித்திருந்தார். தற்போது, இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்த கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். கௌரி கிஷன் நடித்துள்ள புதிய படமான தனுஷின் ‘கர்ணன்’ வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

Share.