மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரம்பா, சங்கீதா, சங்கவி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம்.

தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன், அண்ணாத்த’ என படங்கள் குவிந்தது.

மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

சமீபத்தில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மீனாவின் கணவர் வித்யாசாகர். பின், கடந்த ஜூன் 28-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் காலமானார். தற்போது, நடிகைகள் ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகியோர் மீனாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

Share.