கமலின் ‘பாபநாசம் 2’வில் நடிக்கவுள்ளாரா மீனா?… இன்ஸ்டாகிராமில் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமான தமிழ் படம் ‘நெஞ்சங்கள்’. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவை ‘நவயுகம்’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது திரையுலகம். தமிழில் ‘என் ராசாவின் மனசிலே’வில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

இந்த படத்துக்கு பிறகு மீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன்’ என படங்கள் குவிந்தது. 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் ‘தெறி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தார்.

Meena's Insta Post About Kamal's Papanasam 21

மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது மீனா நடிப்பில் தமிழில் ரஜினியின் ‘அண்ணாத்த’, தெலுங்கில் வெங்கடேஷின் ‘த்ருஷ்யம் 2’, மலையாளத்தில் மோகன்லாலின் ‘ப்ரோ டாடி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் – இயக்குநர் ஜீத்து ஜோசப் காம்போவில் உருவாக உள்ள ‘பாபநாசம்’ படத்தின் பார்ட் 2-வில் கௌதமிக்கு பதிலாக மீனா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.

ஏற்கனவே, ‘த்ரிஷ்யம் 1 & 2’ படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷன்களில் மீனா ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “நீங்கள் ‘பாபநாசம்’ படத்தின் பார்ட் 2-வில் நடிக்குறீங்களா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மீனா “தயவு செய்து இந்த கேள்வியை நீங்கள் கமல் ஹாசன் சாரிடம் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share.