லிங்குசாமி படத்தை தவறவிட்ட தீபிகா படுகோண் !

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த படம் சண்டைக்கோழி. இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . ராஜ்கிரண் , லால் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . டிசம்பர் 2005 -ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நலன் வரவேற்பை பெற்றது .

விக்ரம் கிருஷ்ணா இந்த படத்தை தயாரித்து இருந்தார் .நடிகர் விஷால் பாலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .பாலு ஒரு பொறியியல் மாணவர், இறுதித் தேர்வுக்குப் பிறகு சிதம்பரத்தில் உள்ள தனது வகுப்புத் தோழனும் நண்பருமான கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்கிறார். அவர் கார்த்திக்கின் சகோதரி ஹேமாவை சந்திக்கிறார். இதில் ஹேமாவாக நடித்து இருந்தவர் மீரா ஜாஸ்மின் .

இந்நிலையில் ஹேமா கதாபாத்திரத்தில் முதலில் தீபிகா படுகோனை நடிக்க வைக்க முயன்று உள்ளார் . ஆனால் அப்போது அவரது சம்பளம் அதிகமாக இருந்த காரணத்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது .

Share.