போலீசார் கைது செய்வதற்கு முன்பு கதறி அழுத மீரா மிதுன்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா மிதுன். இவருக்கு அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘8 தோட்டாக்கள்’. ஸ்ரீகணேஷ் இயக்கியிருந்த இந்த படத்தில் வெற்றி – அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை மீரா மிதுனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி’ என படங்கள் குவிந்தது. பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருக்கும் மீரா மிதுன், தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே வருகிறார்.

சமீபத்தில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கேரளாவில் இருந்த மீரா மிதுனை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், போலீசார் கைது செய்வதற்கு முன்பு மீரா மிதுனே அவரது போனில் எடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.