விஜய் – சூர்யா குறித்து அவதூறு பேச்சு… மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்!

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸான நடிகை மீரா மிதுன் சமீபத்தில் நடிகர் ‘தளபதி’ விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது, இது தொடர்பாக மீரா மிதுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “என்னோட எல்லா பிரச்சனையையும் யார் பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னு எனக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு.

என்ன சுத்தி நடந்த எல்லா confusions-க்கும் அப்சரா ரெட்டிங்குற ஒரு திருநங்கை தான் காரணம். industry-ல உள்ள யாருமே இல்லைன்னு நான் இப்போ உணர்ந்துட்டேன். விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என்னை மன்னிச்சிடுங்க. என்னை சுத்தி அவ்ளோ கேம் நடந்திருக்கு. நடிகர் விஜய், நடிகர் சூர்யா i give my heartfelt sorry to all of you for whatever has happened. ஏன்னா இது எல்லாத்துக்குமே காரணம் அப்சரா ரெட்டி. அவ்ளோ இருந்து எல்லாத்தையுமே play பண்ணி, என் PR-ஆ வச்சும் play பண்ணி விஜய் – சூர்யா தான் இதுக்கு காரணம்னு என்ன நம்ப வச்சு இவ்ளோ வேலைய பண்ணியிருக்காங்க.

விஜய் – சூர்யா மற்றும் industry-ல இருக்குற எல்லாருக்குமே என்னோட தரம் தாழ்ந்த மன்னிப்புகளை கேட்டுக்குறேன். என்ன சுத்தி அவ்ளோ நடந்ததுனால, என்ன நடந்துச்சுன்னே தெரியாம அவ்ளோ confusions-ல இருந்தேன். industry-ல இருக்குற எல்லாருமே என்ன மன்னிச்சிடுங்க. இந்த அப்சரா ரெட்டி தான் எனக்கு இவ்ளோ பிரச்சனை கொடுத்து, இவ்ளோ பண்ணி எல்லாத்தையும் உங்க சைடு திருப்பி விட்டுட்டாங்க. என்கிட்டயும் அப்படிதான் சொல்லியிருக்காங்க. அதுக்கான எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு” என்று கூறியுள்ளார்.

Share.