படிப்புக்கு சூர்யா உதவி.; குடும்பத்திற்கு உதவ சூப்பர் ஸ்டாரின் பேரன் முதல்வரிடம் ம

நம் இந்திய தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே (1935) ஆண்டே தமிழ் திரையுலகில் சாதனை படைத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைக் கொண்டவர் இவர்.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரே இவர்தான். இவர் நடித்த படமான ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 ஆண்டுகள் (3 தீபாவளி) திரையரங்கில் ஓடி வரலாற்று சாதனையும் படைத்தது.

இதுதான் தமிழ் சினிமாவின் முதல் படம் எனவும் சொல்லப்படுகிறது.

1959-ம் ஆண்டில் சர்க்கரை நோய் காரணமாக 49 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமானார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

கடந்த 2008ல் அவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினாராம்.

தற்போது இவரது பேரப்பிள்ளைகள் வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு கொடுத்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது..

“என் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை காப்பாற்றினார்.

தற்போது, செக்யூரிட்டி வேலை மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். வாடகை வீட்டில் இருக்கிறோம். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை.

எனவே எங்களின் நிலையறிந்து, வீட்டு வசதி வாரியத்தில் தமிழக அரசு ஒரு வீட்டை ஒதுக்கினால் அங்கேயே வசிப்போம்.

எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும் என நம்புகிறோம்” என கூறினார்.

இவரின் தங்கை குழந்தையின் படிப்புக்கு நடிகர் சூர்யா உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.

Share.