சம்பளத்துக்கு மட்டும் வருவாங்க, ஆனா அதுக்கு வரல… நடிகை மீது கோபத்தில் இருக்கும் படக்குழுவினர்!

முன்னணி ஹீரோவின் மகள் தான் அந்த நடிகை. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த இந்த நடிகை தமிழிலும் என்ட்ரியாகி தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இப்போது, இந்த நடிகையின் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ஒரு தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் ஹீரோ தன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு வந்ததுக்கே, கொரோனா பீதியால் தெறித்து ஓடினார் நடிகை. சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் திடீரென மரணமடைந்தார். ஷூட்டிங் சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது கூட அந்த நடிகையின் மீது எந்த தப்பும் இல்லை என்றே அந்த இயக்குநர் அவருக்கு சப்போர்ட்டாக பேசினார்.

அப்படிப்பட்ட இயக்குநர் இறந்த சமயத்தில் நேரில் சென்று இரங்கல் கூட தெரிவிக்கவில்லையாம் இந்த நடிகை. இப்படத்தில் நடிக்கும்போது சம்பளம் தொடர்பாக பேச அழைத்த போதெல்லாம் மட்டும் அந்த நடிகை அடிக்கடி வந்து சென்றார், ஆனால் இயக்குநர் இறந்ததுக்கு கூட வரவில்லையே என அப்படக்குழுவினர் புலம்பி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.