இதுவரை யாரும் பார்த்திராத இளையராஜாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். அது தான் ‘அன்னக்கிளி’. இந்த படத்தில் சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, இதனை இயக்குநர்கள் தேவராஜ் – மோகன் இணைந்து இயக்கியிருந்தனர். ‘அன்னக்கிளி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ‘இசைஞானி’யின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்ட இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜாவின் மனைவி ஜீவா 2011-ஆம் ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவை துவங்கினார். ஸ்டுடியோ துவங்கிய முதல் நாளில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை தொடங்கினார் இளையராஜா. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், இன்று (ஜூன் 2-ஆம் தேதி) இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

66

67

68

69

70

71

72

73

74

75

76

77

78

79

80

Share.