அடேங்கப்பா… முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘மாநாடு’.

இப்போது தமிழில் ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, தனுஷின் ‘நானே வருவேன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, கார்த்தியின் ‘விருமன்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ.70 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.