‘தளபதி 65’யை இயக்கும் நெல்சன்… விஜய்-க்கு ஜோடியாக மிஷ்கின் பட ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கல் ஸ்பெஷலாக அடுத்த மாதம் (ஜனவரி) 13-ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது யார்? என்ற அடுத்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த கேள்விக்கு பதில் ‘பூஜா ஹெக்டே’ என தகவல் கிடைத்துள்ளது. இவர் இயக்குநர் மிஷ்கின் – நடிகர் ஜீவா காம்போவில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’-யில் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.