விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை பார்த்துட்டு இயக்குநர் மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘மாமனிதன்’ என்ற படம் கடந்த ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா – ‘இசைஞானி’ இளையராஜா சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் மிஷ்கின் இன்ஸ்டாகிராமில் இயக்குநர் சீனு ராமசாமியை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Share.