விஜய்யுடன் கூட்டணி… ட்விட்டர் ஸ்பேஸில் மிஷ்கின் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம்.

‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இது 2014-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘பிசாசு’ என்ற ஹாரர் படத்தின் பார்ட் 2-வாம்.

‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர் ஒருவர் இயக்குநர் மிஷ்கினிடம் “நீங்கள் முன்னணி நடிகர் ‘தளபதி’ விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? அதில் அவருக்கு எந்த மாதிரி ரோல் கொடுப்பீர்கள்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மிஷ்கின் “ஜேம்ஸ் பாண்ட்” என்று கூறியுள்ளார்.

Share.