‘உலக நாயகன்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… கமல் நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த நெப்போலியன்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, இயக்குநர் மகேஷ் நாராயணன் படம், இயக்குநர் வெற்றிமாறன் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், கமல் ஹாசன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1994-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சீவலப்பேரி பாண்டி’. இந்த படத்தை பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நெப்போலியன் நடித்திருந்தார். ஆனால், பிரதாப் போத்தனின் முதல் சாய்ஸாக இருந்தது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தானாம். பின், சில காரணங்களால் கமலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.