“அஜித்தை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறேன்”… நயன்தாராவின் திருமணம் நடக்கும் ரிசார்ட்டுக்கு வெளியே அடம்பிடித்த நரிக்குறவர் சிறுவன்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.

சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (ஜூன் 9-ஆம் தேதி) காலை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது, திருமணம் நடக்கும் ரிசார்ட்டுக்கு வெளியே ஒரு நரிக்குறவர் சிறுவன் நடிகர் அஜித் வந்தால் அவரை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறேன் என அடம்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Share.