வரவேற்பை பெறும் வாய்தா டிரைலர்

அறிமுக இயக்குனர் மகிவர்மன் சி.எஸ் இயக்கிவுள்ள திரைப்படம் ‘வாய்தா’. இந்த படத்தில் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இதில் கதாநாயகியாக ஜெசிகா நடித்து இருக்கிறார். நடிகர் நாசர், ‘கே.டி என்கிற கருப்புதுறை’ பட புகழ் மு.ராமசாமி உள்ளிட்ட பல நடிகர்களான இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். மே-6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.இந்நிலையில்.

‘ வாய்தா ‘ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

Share.