நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது . இந்த படத்திற்கு தென்மா என்பவர் இசையமைத்து இருக்கிறார் . ஆர்.கே.செல்வா இந்த படத்திற்கு எடிட் செய்து உள்ளார் .கிஷோர் குமார் இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார் . காளிதாஸ் ஜெயராம் , கலையரசன் , துஷாரா விஜயன் ஆகியோர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . மேலும் பா.ரஞ்சித் பேசியுள்ள கருத்துக்களும் புதிய தலைமுறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் வெளியான முதல் 8 நாளில் இந்த படம் 2.89 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.