தனுஷ், விஜய் சேதுபதிக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

2019-ஆம் ஆண்டிற்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி.இமானுக்கு ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களுக்கு இசையமைத்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் ஜூரி விருது பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்துக்கான விருது வெற்றிமாறன் – தனுஷ் காம்போவில் வெளியான ‘அசுரன்’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது நாகவிஷாலுக்கு ‘KD’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது.

1

2

3

4

5

Share.