சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஜூலை 22-ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ‘சூரரைப் போற்று’ படத்தின் பின்னணி இசைக்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான விருது சூர்யா – சுதா கொங்கரா காம்போவில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைக்கான விருது சுதா கொங்கரா – ஷாலினி உஷா நாயர் ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று’ படத்துக்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனத்துக்கான விருது மடோன் அஷ்வினுக்கு ‘மண்டேலா’ படத்துக்காக என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருது லக்ஷ்மி ப்ரியாவுக்கு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி விருது அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வினுக்கு ‘மண்டேலா’ படத்தை இயக்கியதற்காக என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது வஸந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.