அடேங்கப்பா… ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். அதன் பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கார்த்திக், மீண்டும் ரீ-என்ட்ரியாகி அருண் விஜய்யின் ‘மாஞ்சா வேலு’, விக்ரமின் ‘ராவணன்’, தனுஷின் ‘அனேகன்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, மகன் கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’ ஆகிய படங்களில் நடித்தார்.

இப்போது, 60 வயதான கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் புதிய படம் ‘தீ இவன்’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் டி.எம்.ஜெயமுருகன். இதில் மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜான் விஜய், அபிதா மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது தவிர பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார் கார்த்திக். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

 

Share.