நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண கிளிம்ப்ஸ் வெளியானது !

போடா போடி படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் , போன்ற படங்களை இயக்கி இருந்தார் ‌. இவர் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் படத்தை இயக்க உள்ளார்‌.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது.கடற்கறை பகுதியில் உள்ள ரிசார்ட் அது. திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தனர் . திருமணத்திற்கு பிறகு இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு சென்று இருந்தனர் .

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் படமாக்கி உள்ளது . பல கோடி ரூபாய்க்கு இவர்களது திருமணத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது . தற்போது இந்த திருமணத்தின் கிளிம்ப்ஸ் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share.