ஸ்ருதி ஹாசனுக்கு பதிலாக நடித்த நயன்தாரா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.

மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) என்ற படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2020-யில் OTT-யில் ரிலீஸான தமிழ் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜியும், NJ சரவணனும் சேர்ந்து இயக்கியிருந்தனர். இதில் டைட்டில் ரோலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். ஆனால், ஆர்.ஜே.பாலாஜியின் முதல் சாய்ஸாக இருந்தது ஸ்ருதி ஹாசன் தானாம். பின், சில காரணங்களால் ஸ்ருதி ஹாசனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.