மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற்றது.கடற்கறை பகுதியில் உள்ள ரிசார்ட் அது. இதனால் ரிசார்ட்சின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்குள் பொதுமக்களை அனுமதிக்கப்படவில்லை. திருமண அழைப்பிதழில் பார் கோடு ஸ்கேன் செய்த பின்னரே விஐபி உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
திருமணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை அழைத்து, அதிகாரப்பூர்வமாக திருமணம் பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.

அதன் பிறகு ஜுன் 11 ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து தங்களது திரை வாழ்விற்கு ஆதரவு கேட்டனர். தற்போது இந்த புது ஜோடி கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய மனித உரிமை
ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கடற்கரை என்பது பொதுவான இடம். அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.

அந்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Share.