திருப்பதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா !

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இசையமைப்பாளர் அனிருத்தின் 25வது படமாக இந்த படம் அமைந்துள்ளது . இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் மிக பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் தந்துள்ளது . படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டுமே அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்நிலையில் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி உள்ளது .

படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது என்றும் ,நடிகை சமந்தா அவர்களின் நடிப்பையும் புகழ்ந்து வருகின்றனர் மேலும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர் . இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று உள்ளனர் .

அங்கு அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது . மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து பல கோவில்களுக்கு போவதும் அந்த புகைப்படங்கள் வைரலாகுவதும் வழக்கமாக இருக்கிறது .

Share.