விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா?… நயன்தாரா சொன்ன பதில் என்ன தெரியுமா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம் மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

சமீபத்தில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டதுடன் “விரலோடு உயிர் கூட கோர்த்து” என்று பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டில்லில் நயன்தாரா கையில் மோதிரம் இருந்ததால், இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது, விஜய் டிவியில் ‘நெற்றிக்கண்’ படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் நடிகை நயன்தாரா “இது engagement ring தான்” என்று கூறியுள்ளார்.

Share.