கண்ணீர் விட்டு கதறி அழுத நயன்தாரா… தனது அப்பா பற்றி பேசிய உருக்கமான வீடியோ!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம் மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை நாளை (ஆகஸ்ட் 13-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

தற்போது, விஜய் டிவியில் ‘நெற்றிக்கண்’ படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் நடிகை நயன்தாராவிடம் “உங்களுக்கு டைம் மெஷின் கிடச்சா? என்ன விஷயத்தை மாற்றுவீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா “என்னோட அப்பாவை நான் ஒரு ஹீரோவா தான் பார்த்திருக்கேன். கடந்த 13 வருடங்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்னோட அப்பாவோட விஷயத்தை மட்டும், என்னால வந்து மாத்த முடிஞ்சா அவர் அப்போ எப்படி இருந்தாரோ, அப்படியே கொண்டு வருவேன்” என்று அழுதபடி பதில் சொல்லியிருக்கிறார்.

Share.