‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ஒளிபரப்பாகப்போகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார். பின், கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் மும்பையில் நடக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டார்.

ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது, ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் மிக விரைவில் இவர்களின் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு சில ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளனர்.

Share.