ஓணம் பண்டிகையை கொண்டாட விக்னேஷ் சிவன், நயன்தாரா போட்ட ப்ளான்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ஜாதகத்தை பார்த்த ஒரு பிரபல ஜோதிடர் திருமண தோஷம் இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால், காளஹஸ்தி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் கும்பகோணம் அருகே இருக்கும் திருநாகேஸ்வரம் சென்று விக்னேஷ் – நயனை வழிபடச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஏற்கனவே, இந்த லிஸ்டில் உள்ள மூன்று கோயில்களுக்கு விசிட் அடித்து விட்டார்கள். இன்னும் திருநாகேஸ்வரம் மட்டும் தான் பேலன்ஸாம். கூடிய விரைவில் ‘கொரோனா’ லாக் டவுன் முடிந்த பிறகு, திருநாகேஸ்வரம் செல்ல ப்ளான் போட்டு வருகிறார்களாம் விக்கியும், நயனும்.

அங்கு சென்று வந்தவுடன் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம். எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். தற்போது, ஓணம் பண்டிகையை கொச்சியில் கொண்டாடுவதற்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.