நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போகும் வடிவேலு பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

Nayanthara's Next Film With Vadivelu Movie Director1

Nayanthara’s Next Film With Vadivelu Movie Director1

தற்போது, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் யுவராஜ் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ‘போட்டா போட்டி’ மற்றும் வடிவேலுவின் ‘தெனாலிராமன், எலி’ ஆகிய படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.