‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ள ‘O2’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘O2’ படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பரத் நீலகண்டன், ‘ரித்து ராக்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஜூன் 17-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.