அறிமுக இயக்குநர் இயக்கும் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’-க்காக நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

நயன்தாரா – நிலேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம்.

மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.