கமலின் பெயரை எழுதியே அவரது முகத் தோற்றத்தை வரைந்து அசத்திய மாணவி நேஹா!

திரையுலகில் ஒரு கலைஞன் தான் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதித்த விஷயங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.

1960-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான ‘களத்தூர் கண்ணம்மா’-வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல் ஹாசன். அடுத்தடுத்து ஐந்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். அதன் பிறகு கமல் எடுத்த அவதாரங்கள் பல, படத்துக்கு படம் தன் நடிப்பால் புதிய முயற்சிகளை செய்து அப்ளாஸ் வாங்கினார்.

Neha Drawn Kamal's Face Using Name1

பல புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கே சேரும். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய, ஆசிய, அமெரிக்க, சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார். வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா!” என்று கூறியுள்ளார்.

Share.