‘தலைவர் 169’-க்காக 31 டைட்டில்களை சொன்ன நெல்சன்… இதில் ரஜினி டிக் அடித்த டைட்டில் இதுதான்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியிடம் இப்படத்திற்காக 30 டைட்டில்களை சொல்லியிருக்கிறார். இதில் எந்த டைட்டிலுமே ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். பின், ‘கிரிமினல்’ (CRIMINAL) என்ற டைட்டிலை சொல்லியிருக்கிறார் நெல்சன். இந்த டைட்டிலை ஆப்ஷனில் வைக்க சொல்லிட்டாராம் ரஜினி.

Share.