விஜய் ரசிகர்களை ஏமாற்றிய நெல்சன் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது . இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே,செல்வராகவன்,யோகி பாபு,ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி,விடிவி கணேஷ், ஆகியோர் நடித்துள்ளனர் .அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் . தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் , இந்தி, என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது இந்த படம் .

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் தற்போது பேசியுள்ளார் .அதில் பீஸ்ட் படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம். படத்தின் கதை ட்ரைலரை பார்க்கும்பொழுது நன்றா தெரிந்து இருக்கும். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் . விஜய்க்கு இது ஒரு வித்தியாசமான படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார் .

டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா போன்று பீஸ்ட் படமும் டார்க்-கியூமர் படமா என்ற கேள்விக்கு பீஸ்ட் படம் தன்னுடைய பட சாயலில் இருக்காது என்றும் தன்னுடைய மற்ற படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார் . மேலும் நடிகர் விஜயின் கதாபாத்திரம் ஹொலிவுட்டில் வெளியன் ஜான் விக் கதாபாத்திரம் மந்திர இருக்கும் என்று கூறி உள்ளார் . மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஒப்பென்னிங் பாடல் இல்லை என்று கூறி உள்ளார் .

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் அவருக்கு ஒப்பென்னிங் பாடல் இருக்கும் . பீஸ்ட் படத்தில் அது இல்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .

Share.