‘ரஜினி 169’-ஐ இயக்கும் நெல்சன்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘சன் பிக்சர்ஸ்’!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

தற்போது, ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளதாவும், இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நெல்சன் இப்போது ‘தளபதி’ விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Share.