சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மாநாடு . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் யுவன் சங்கர் ராஜா. S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை தயாரித்து இருந்தார் . கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார் . கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

நீண்ட வருடமாக வெற்றிக்கு காத்துகொண்டு இருந்த சிம்புவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கும் இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது . உலக அளவில் இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முன்னணி வினியோகஸ்தராய் இருக்கும் திருப்பூர் சூப்பரமணியன் ஒரு முக்கியமான அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு வெற்றி விழா நடந்தது. அதில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பொய் கூற சொல்லி சிம்பு தயாரிப்பாளரிடம் கேட்டு உள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை எனவே அந்த விழாவில் சிம்பு பங்கேற்கவில்லை என்ற தகவலை அவர் கூறியுள்ளார். சிம்புவின் இந்த செயல் பலருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

சிம்புவின் இந்த செயலை பலர் இப்போது கிண்டலடித்து வருகின்றனர்.

Share.