சதீஷை வாழ்த்திய சிபி ! என்ன காரணம் தெரியுமா ?

2006-ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சதிஷ் .அதன் பிறகு தமிழ் படம் , மதராசபட்டினம் , வாகை சூட வா போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் 2013-ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது .

அதன் பிறகு கத்தி , மான் கராத்தே ,ஆம்பள என பல வெற்றி படங்களில் நகைச்சுவை நடிகரை நடித்து இருந்தார் .இந்நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று இவர் நடித்த நாய் சேகர் படம் வெளியானது . இந்த
படத்தில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்து இருந்தார் சதீஷ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கி இருந்தார் .இந்த படத்தை எ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது .

இந்த நிலையில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது .சட்டம் என் கையில் என்று அந்த படத்திற்கு தலைப்பு வைத்து இருக்கிறார்கள் .முகத்தில் ரத்தம் வழிய கோபத்துடன் இருக்கும் நடிகர் சதீஷின் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது . இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சதீஷின் ஆக்சன் அவதாரத்தை பார்த்த நடிகர் சிபிராஜ் ட்வீட் செய்து நடிகர் சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் . மேலும் தனது தந்தை சத்யராஜ் 1978-ஆம் ஆண்டு கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த சட்டம் என் கையில் என்ற படத்தில் அறிமுகம் ஆனார் என்ற தகவலையும் பதிவிட்டுள்ளார் சிபிராஜ்.

Share.