வைரலாகும் ரஷ்மிகா மந்தண்ணா போட்டோஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது .இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது . இந்த நிலையில் தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது .

படத்தின் இயக்குனர் வம்ஷி , நடிகர் விஜய் , நாயகி ரஷ்மிகா மந்தண்ணா, இசையமைப்பாளர் தமன் ,நடிகர் சரத்குமார், பாடல் ஆசிரியர் விவேக் , ஆகியோர் கலந்து கொண்டனர் . பூஜையில் விஜய்யுடன் ரஷ்மிகா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகிறது . நடிகர் சரத்குமார் மற்றும் விஜய் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும் . மேலும் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுவது மட்டும் இல்லாமல் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

ஏற்கனவே இவர் நடிகர் விஜய் நடித்த படமான மெர்சல் , சர்க்கார் , பிகில் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . பாடல்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்த விவேக் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்ப்பாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

Share.