கோபிநாத்தின் வாசுவின் கர்ப்பிணிகள்

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்’. இந்த படம் தமிழில் படம் ‛வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகிற வருகிறது. மணி நாகராஜ் இயக்குகிறார். நான்கு விதமான கர்ப்பிணி பெண்களை சந்திக்கும் ஒரு மருத்துவரின் கதை இது. இந்த படத்தில் நீயா நானா கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார். இந்த படத்தை விஜய்யுன் உறவினரும், மாஸ்டர் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

நீயா நானா கோபிநாத் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இருந்தாலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . படத்தின் முதல் பார்வை வித்தியாசமாக உள்ள காரணத்தால் அனைவரும் இந்த படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது . மலையாளத்தில் நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்துள்ள காரணத்தால் தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பை தமிழ் ரசிகர்கள் தருவார்கள் என்று படக்குழு நம்புகிறது .

Share.