செம ஸ்டைலாக போஸ் கொடுத்த பூஜா !

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருப்பவர் பூஜா ஹெக்டெ. சம்பித்தில் இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் . இவர் நடமாடிய அரபிக் குத்து பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . பீஸ்ட் படத்திற்கு பிறகு இவர் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைய உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள பாவாடியுடே பகத்சிங் என்கிற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு காரணம் ஹரிஷ் சங்கர் கடைசியாக இயக்கிய துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா கணேஷ் ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடித்தார். அதனால் இந்த படத்திலும் பூஜா தான் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில்தான் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் பூஜா நியூயார்க் சென்றுள்ளார். நியூயார்க்கிலிருந்து பூஜா இன்ஸ்டாவில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் . அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Share.