விரைவில் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் பார்வை

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள படம் இடி முழக்கம் . இந்த படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . இடி முழுக்கம் தலைப்பை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் உதயநிதி டிவீட்டரில் முதன் முறையாக அறிவித்தனர் . இந்த படத்தின் கதையை ஜெயமோகன் எழுதி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்து இருக்கிறது . இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது .

ரகுநந்தன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சோனி மியூசிக் நிறுவனம் இந்த படத்தின் மியூசிக் ஆல்பத்தை வாங்கி உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை பற்றி இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார் . அதில் “கலைமகன் ” முபாரக் தயாரிப்பில் , ஜி.வி.பிரகாஷ் , காயத்ரி அருள்தாஸ் , அருள்தாஸ் , சரண்யா பொன்வண்ணன் , எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் ரகுநந்தன் மற்றும் வைரமுத்து பால்களின் இடிமுழக்கம் முதல் பார்வை விரைவில் என ட்வீட் செய்துள்ளார் .

இந்த பதிவுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் அவர்களின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் . படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது .

Share.