இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ” SK 20 “

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகனாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றது .

இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படம் வருகின்ற மே 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் sk 20 படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் டான் படத்தின் வெளீயிட்டுக்கு பின் இந்த படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கு .

படக்குழு படத்தை ஆகஸ்ட் மாதம் வெளீயிடலாம் என்று முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு .

Share.