ரூ.50 லட்சம் மோசடி… போலீஸில் புகார் கொடுத்த நடிகை நிக்கி கல்ராணி!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் நடித்த முதல் படமே ஹாரர் ஜானர். அது தான் ‘டார்லிங்’. இந்த படத்தில் கதையின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நிக்கி கல்ராணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹர ஹர மஹாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, கீ’ என படங்கள் குவிந்தது.

நிக்கி கல்ராணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, நிக்கி கல்ராணி நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஓட்டல் உரிமையாளர் நிகில் ஹெக்டே என்பவர் மீது பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி புகார் கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் கொடுத்த புகாரில் “கடந்த 2016-ஆம் ஆண்டு கோரமங்களாவில் நிகில் ஹெக்டே நடத்தி வரும் ஒரு ஓட்டலில் நான் ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் தருவதாக நிகில் ஹெக்டே கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்னபடி இதுவரை பணம் கொடுக்கவே இல்லை. மேலும், என்னிடம் ஏற்கனவே வாங்கிய ரூ.50 லட்சத்தை திருப்பி கொடுக்க சொல்லி கேட்டும் அவர் இப்பவரை கொடுக்கவே இல்லை. நிகில் ஹெக்டே மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Share.