ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நிக்கி கல்ராணியின் அக்காவும், பிரபல நடிகையுமான சஞ்சனா… குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் ‘டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா’ என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணியும் பாப்புலர் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்’ என்ற படத்தில் மட்டுமே நடித்த சஞ்சனா கல்ராணி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

சஞ்சனா கல்ராணியின் கணவர் பெயர் அசீஷ் பாஷா. தற்போது, அசீஷ் பாஷா – சஞ்சனா கல்ராணி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் (மே 18-ஆம் தேதி) சஞ்சனா கல்ராணியின் தங்கை நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share.