சொக்க வைக்கும் பேரழகில் நிவேதா பெத்துராஜ்… தீயாய் பரவும் வீடியோ!

ஒரே படத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த தமிழ் பேசும் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் ‘ஒரு நாள் கூத்து’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே’ என்ற பாடலின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வைரலானது. அப்பாடல் மூலம் தான் அதிக கவனம் ஈர்த்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்தார்.

பின், டோலிவுட்டில் கால் பதித்தார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் அறிமுக படமான ‘மெண்டல் மதிலோ’-வும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதனைத் தொடர்ந்து நிவேதா பெத்துராஜிற்கு அடித்தது ஜாக்பாட். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கால்ஷீட் டைரியில் குவிந்தது. நிவேதா பெத்துராஜிற்கு தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தற்போது, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, ஜெய்யின் ‘பார்ட்டி’ என இரண்டு தமிழ் படங்களும் மற்றும் தெலுங்கு மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நிவேதா பெத்துராஜின் அசத்தலான புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.