சேலையில் பேரழகாய் மின்னும் நிவேதா தாமஸுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்-க்கு தங்கச்சியாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குருவி’. அதன் பிறகு நடிகை நிவேதா தாமஸுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார்’ என படங்கள் குவிந்தது. இதில் ‘பாபநாசம்’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரண்டு படங்களிலும் சூப்பராக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் நிவேதா தாமஸ். நிவேதா தாமஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

Nivetha Thomas Latest Stills1

இப்போது நிவேதா தாமஸ் ‘ஷாகினி தாகினி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

Share.