பின்வாங்கிய அஜித் படம் ! இது தான் உண்மையான காரணமா ?

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என்று படக்குழு அறிவித்து இருந்தது .இது ஒருபக்கம் இருக்க நடிகர் அஜித் வலிமை படத்துக்கு பிறகு ஹச்.வினோத் இயக்கத்தில் அவரது 61 படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இந்த படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டது .வாரிசு படத்துடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது . ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடக்க வாய்ப்பு இருக்கிறது இதனால் வாரிசு படத்துடன் நடிகர் அஜித்தின் அவரது 61 வது படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது .

Share.