சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் ! என்ன காரணம் தெரியுமா

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராய் திகழந்துக் கொண்டு இருக்கிறார் . தற்பொழுது இவர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் . சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது . இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் 275 மில்லியன் பார்வைளார்களை கடந்து இணையத்தில் சாதனை செய்துள்ளது . இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் . இதனை தொடர்ந்து வெளியான ஜாலி ஒ ஜிம்கானா பாடலும் வைரலானது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏப்ரல் 02ம் தேதி பீஸ்ட் படத்தின் ட்ரைலரை வெளியிட்டது . இந்த ட்ரைலருக்கும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி இந்த படம் வெளியாகுவதை தொடர்ந்து பல ஊரல்களில் முன் பதிவு ஆரம்பம் ஆகியது . பல இடங்களில் படத்தின் டிக்கெட் உடனெ விற்று தீர்ந்தது.

ஆனால் கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில், பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த நடிகர் விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அதையும் மீறி ரசிகர்கள் தொடர்ந்து சாலையை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு செய்தததால், அவர்களின் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Share.